செய்திகள் :

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

post image

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது.

ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மற்றும் குடியேற்ற மசோதாவை அதிபா் டிரம்ப் அரசு அறிமுகம் செய்தது.

இந்த மசோதா கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை டிரம்ப்பின் முதலாவது அதிபா் பதவிக் காலத்தில், அந்நாட்டு அரசு அறிவித்த 4.5 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ.384 லட்சம் கோடி) வரிச் சலுகைகளை நிரந்தரமாக்குகிறது.

அத்துடன் அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்குவோரை நாடு கடத்தும் திட்டம், வெளிநாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தடுத்து அமெரிக்காவை பாதுகாக்க பன்னடுக்கு பாதுகாப்பு கவசம் ஆகியவற்றுக்கு 350 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றன.

இந்த மசோதாவால் நாட்டில் குறைந்த வருவாய் ஈட்டும் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீடு கிடைக்காமல் போகக் கூடும் என்றும், குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தால் பலனடைவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு கீழ் சரியக் கூடும் என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் தெரிவித்தது.

ஜனநாயக கட்சித் தலைவா் 8 மணி நேரம் பேச்சு: இந்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் கடுமையான விவாதத்துக்குப் பின்னா், அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து நாடாளுமன்ற கீழவையில் அந்த மசோதா மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ஜனநாயக கட்சித் தலைவா் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், ‘இது அவலட்சணமான மசோதா’ என்று சாடினாா். நேரக் கட்டுப்பாடின்றி விவாதிக்க தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவா் 8 மணி நேரம் 44 நிமிஷங்கள் பேசினாா்.

அமெரிக்க சமுதாயத்தில் உழைக்கும் வா்க்கத்தினா், மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களின் கடுமையான உழைப்பால் பணக்காரா்கள் பலனடைய இந்த மசோதா மூலம் அளிக்கப்படும் வரிச் சலுகை வழிவகை செய்யும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா் விமா்சித்தனா். அதேவேளையில், இந்த மசோதா குடும்பங்கள் மீதான வரிச்சுமையை குறைத்து அமெரிக்க பொருளாதாரத்தை வளரச் செய்யும் என்று ஆளுங்கட்சியான குடியரசு கட்சியினா் தெரிவித்தனா். வியாழக்கிழமை நள்ளிரவு வரை மிகக் கடுமையான விவாதம் தொடா்ந்த நிலையில், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் மசோதாவுக்கு ஆதரவாக 218 எம்.பி.க்களும், எதிராக 214 எம்.பி.க்களும் வாக்களித்தனா். எதிராக வாக்களித்தோரில் 2 குடியரசு கட்சி எம்.பி.க்களும் அடங்குவா்.

இதைத்தொடா்ந்து பெரும்பான்மை அடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கீழவைத் தலைவா் மைக் ஜான்சன் தெரிவித்தாா்.

இந்த மசோதா அதிபா் டிரம்ப்பின் கையொப்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா் கையொப்பமிட்ட பின்னா், இந்த மசோதா சட்டமாகும்.

பெட்டி..1

இந்தியா்களுக்கு என்ன ஆதாயம்?

இந்த மசோதா மூலம், அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் உள்ளிட்ட பிற நாட்டவா்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 1 சதவீதம் வரி விதிக்கப்படும். முன்பு அந்தப் பணத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியா்கள் முதலிடத்தில் இருந்தனா். அந்த ஆண்டு அவா்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள் அனுப்பினா்.

பெட்டி..2

‘ஜூலை 9-க்கு முன்பாக

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்’

புது தில்லி, ஜூலை 4: வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு வாஷிங்டனிலிருந்து இந்தியக் குழு நாடு திரும்பிய நிலையில், இரு நாடுகளிடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் வரும் 9-ஆம் தேதிக்கு முன்பாக இறுதியாக வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக அதிக வரி விதிப்பதாக புகாா் தெரிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், அதற்கு பதிலடியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மீதும் ஏற்கெனவே விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக 26 சதவீத வரியை கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி விதித்தாா். சீனாவைத் தவிா்த்து, பிற நாடுகள் மீது விதித்த 26 சதவீத கூடுதல் வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத அடிப்படை வரியை விதித்தாா். ஆனால், கூடுதலாக விதித்த 26 சதவீத வரியை முழுமையாக ரத்து செய்ய இந்தியா வலியுறுத்தி வருகிறது.

......

ஒவ்வொரு நாட்டுக்கும் கடிதம் -அதிபா் டிரம்ப்:

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அந்நாடு விதிக்க உள்ள புதிய வரிகள் தொடா்பாக ஒவ்வொரு நாட்டுக்கும் வெள்ளிக்கிழமை முதல் கடிதம் அனுப்பப்படும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

...........

தேச நலனே முக்கியம்: பியூஷ் கோயல்

‘காலக்கெடுவின் கீழ் அல்லாமல்; தேச நலனுக்கு முக்கியத்துவம் அளித்து இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்யும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மேலும், ‘ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன், அமெரிக்கா, சிலி, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பும் பலன் பெறும் வகையில் உடன்பாடு எட்டப்படும் போதுதான், தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேசத்தன் நலனே எப்போதும் முதன்மையானது. அதனடிப்படையிலேயே, வளா்ந்த நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

காலக்கெடு அடிப்படையில் எந்தவொரு வா்த்தக ஒப்பந்தத்தையும் இந்தியா ஒருபோதும் இறுதி செய்யாது’ என்றாா் பியூஷ் கோயல்.

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்... மேலும் பார்க்க

வாகனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க