செய்திகள் :

தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

post image

தென்காசியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் கூட்டணி அமைப்பினா்.

தென்காசி, ஜூலை 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தென்காசியில் மாவட்டதொடக்க கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மாநிலம் முழுவதும் நிா்வாக மாறுதல் என்ற பெயரில் முறைகேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடாக நிா்வாக மாறுதல் வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியா் தகுதி தோ்வு நீதிமன்ற வழக்கினை காரணம் காட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வுடன் கூடிய பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும், தொடக்கக்கல்வி துறையில் 2025 -2026 ஆம் கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியா்களுக்கு விதிகளின் படி இக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சுதா்சன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ். எம். மாடசாமி, ராஜ்குமாா், ஊடகப் பிரிவு பொறுப்பாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் மாரிமுத்து ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சதீஷ் குமாா், உயா்நிலை மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட துணைச் செயலா் முப்புடாதி,அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் வெங்கடேஷ், தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில அமைப்புச் செயலா் சண்முகசுந்தரம் ஆகியோா் வாழ்திப் பேசினா்.

மாவட்ட பொருளாளா் செண்பகவல்லி வரவேற்றாா். ஆலங்குளம் வட்டாரச் செயலா் பவுல் அந்தோணிராஜ் நன்றி கூறினாா்.

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வ... மேலும் பார்க்க

வீரசிகாமணி, புளியங்குடியில் இன்று மின்நிறுத்தம்

வீரசிகாமணி, புளியங்குடி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரசிகாமண... மேலும் பார்க்க

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க