BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன்புதூா் மீராகனி கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது;
திருப்புவனம் டிஎஸ்பி தூண்டுதலின் பேரில்தான் இளைஞா் அஜித்குமாா் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட காவலா்களின் குடும்பத்தினா் தெரிவித்து வருகின்றனா்.
எனவே, தமிழக அரசு அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்றாா்.
சங்க நிா்வாகி ஜெயராமன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.