செய்திகள் :

Doctor Vikatan: ஃபேஷியல் செய்வதற்கு முன் முகத்துக்கு ப்ளீச் செய்வது சரியானதா?

post image

Doctor Vikatan: முன்பெல்லாம் பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்துகொண்டால், அடுத்தடுத்த நாள்களில் முகம் பளிச்சென காட்சியளிக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஃபேஷியல் செய்தால் அதன் பலன் தெரிவதே இல்லை.  ஃபேஷியல் செய்யும் முறை மாறிவிட்டதா அல்லது ஃபேஷியல் சிகிச்சையே பலன் தராது என அர்த்தமா... ஃபேஷியல் தேவைதானா இல்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

முன்பெல்லாம் ஃபேஷியல் செய்துகொள்ள பார்லர் போனால், ஃபேஷியலுக்கு முன் ப்ளீச்சிங் செய்வார்கள்.  அப்படிச் செய்வதால், முகத்திலுள்ள ரோமங்கள் எல்லாம் பூனைமுடி மாதிரி மாறும். சருமம் பளிச்சென நிறம் கூடியது மாதிரி தெரியும். 

இப்போது ப்ளீச்சிங் பொருள்களில் பல தடை செய்யப்பட்டுள்ளன. ப்ளீச் செய்து சரியா, தவறா என்றால், அது நிச்சயம் தவறுதான். அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் சருமத்துக்கு மிகவும் கெடுதலானவை. எனவே, ப்ளீச் செய்வதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. பல இடங்களிலும் ப்ளீச் செய்வதில்லை என்பதால்தான் ஃபேஷியல் செய்த பிறகு அதன் வித்தியாசத்தை உங்களால் உணர முடிவதில்லை. 

அதே சமயம் ஃபேஷியல் செய்து சரியா என்றால், சரியானதுதான். அது ஒருவகையில் நம் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவது போன்றதுதான்.  சருமத்தின் செல்கள் 14 நாள்களுக்கொரு முறை வளர்ந்துகொண்டே இருக்கும். அந்த செல்கள் உதிர்ந்து, மீண்டும் புதிய செல்கள் உருவாகும். வயதாக, ஆக இறந்த செல்கள் உதிராமல், சருமத்திலேயே தேங்கி நிற்கும். அதை நீக்கிவிட ஃபேஷியல் செய்வது அவசியமாகிறது.

ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது.

ஃபேஷியல் செய்வதென முடிவு செய்துவிட்டால், அதை மருத்துவர்களிடம் செய்துகொள்வதுதான் பாதுகாப்பானது. பியூட்டி பார்லர்களில் செய்யும்போது யாருடைய சருமம் எந்த வகையிலானது, அந்தச் சருமத்துக்கு எந்தப் பொருள் பொருந்தும் என்றெல்லாம் பார்த்துச் செய்கிறார்களா என்பது சந்தேகமே. என்ன பிராண்டு அழகு சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதும் சந்தேகம்தான். அதையெல்லாம் கவனிக்கத் தெரிந்த நிபுணர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். எனவே, சரும மருத்துவர்களிடம் ஃபேஷியல் செய்துகொள்வதுதான் சிறந்தது. அதையும் எளிமையான ஃபேஷியலாக வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பு.

ஃபேஷியல் செய்த அடுத்த நாளே உங்கள் முகத்தில் வித்தியாசத்தை எதிர்பார்க்கக்கூடாது. அதுவும் கிட்டத்தட்ட ஜிம் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போன்றதுதான். ஜிம்மில் சேர்ந்த அடுத்த நாளே, உடல் சரியான வடிவத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படித் தவறானதோ, அதைப் போலத்தான் ஃபேஷியலும்.  மாதம் ஒருமுறையாவது ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும். முறையாகச் செய்யப்படும் பட்சத்தில் உங்கள் சருமம் பொலிவிழக்காமல், பளிச்சென இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!

முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான கார... மேலும் பார்க்க

Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில் எக்கச்சக்க அழகுக் குறிப்புகளும் இருக்கின்றன என்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசந்த்ரா. ஃபேஸ் பேக்பொலிவான முகம்!வெயிலில் சென்று வந்தப் ... மேலும் பார்க்க

Beauty: இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?

தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது. இதோ கலப்படமில்லாத தேனின் சில அழகு பலன்கள்..!தேனின் சில அழகுக்குறிப்புகள்.முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10... மேலும் பார்க்க

Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!... மேலும் பார்க்க