செய்திகள் :

Pimple free face: முகப்பரு இல்லாத முகத்துக்கு சில டிப்ஸ்!

post image

முகத்தின் அழகைக் கெடுப்பது முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ்க்கட்டிகள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். இவை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டீர்கள் என்றால், அவற்றில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்கிற ஒரு ஐடியா உங்களுக்குக் கிடைத்துவிடும்.

Pimples
Pimples (Representational Image)

* அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது.

* சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

* காற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம்.

* பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.

* பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.

dandruff treatment

* அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும்.

* தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone), முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.

* அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருள்களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள்.

* ஐஸ்க்ரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில் எக்கச்சக்க அழகுக் குறிப்புகளும் இருக்கின்றன என்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசந்த்ரா. ஃபேஸ் பேக்பொலிவான முகம்!வெயிலில் சென்று வந்தப் ... மேலும் பார்க்க

Beauty: இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?

தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது. இதோ கலப்படமில்லாத தேனின் சில அழகு பலன்கள்..!தேனின் சில அழகுக்குறிப்புகள்.முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10... மேலும் பார்க்க

Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!... மேலும் பார்க்க

Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

அழகு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முகம் மட்டுமே. அந்த முகத்தை அழகாகவும் பொலிவுடனும் காண்பிப்பதற்கு ஏராளமான கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கொண்டு ... மேலும் பார்க்க