ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்
Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!
உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது.

அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார்.
‘இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தைக் காட்டுகிறது.
எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுத்தி வருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.