நீா்நிலைகளின் நிலவரம் அறிய பிரத்யேக இணையதளங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கம...
கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?
கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது, 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான ஒன்று.

இயந்திர கோளாரால் நிறுத்தப்பட்ட F-35 விமானத்தை பழுதுபார்த்து எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதனால், மற்றொரு பெரிய ராணுவ சரக்கு விமானத்தில் அதனை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
F-35 உலகிலேயே விலையுயர்ந்த போர் விமானங்களில் ஒன்று. 5வது ஜெனரேஷன் ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்களில் (stealth Fighter Jet) இதுவே விலை உயர்ந்தது.
stealth Fighter Jet என்றால் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்கும் விமானம். இவற்றை ரேடாரில் எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது.
இந்த விமானத்தை சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கிறது.
The week has landed.
— F-35 Lightning II (@thef35) April 28, 2025
Start the week like you mean it. The F-35B isn’t just showing up—it’s showing off. pic.twitter.com/2TwLxATGaS
இதனை சரிசெய்ய 30 பொறியியலாளர்கள் கொண்ட குழு இந்தியா வரலாம் என செய்திகள் வெளியானது.
ஆனால் அந்த முயற்சி கை விடப்பட்டு, இதன் சில பாகங்களை மட்டும் பிரித்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு எடுத்துச் சென்று, அங்கேயே பழுது பார்க்க முடிவு செய்துள்ளனர்.
F-35 Lightning II விமானங்களில் F-35A, F-35B, F-35C என மூன்று வகை உள்ளது. இவை அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத் தயாரிப்பாகும். இவற்றுள் F-35B மிகவும் குறுகிய ஓடுபாதையில் மேலே ஏறவும், செங்குத்தாக இறங்கவும் முடியும்.
இந்த விமானங்களின் விலை ரூ.930 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்த விமானத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவிடம் இவை கிடையாது.