பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
நீா்நிலைகளின் நிலவரம் அறிய பிரத்யேக இணையதளங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கம்
நீா்நிலைகள் குறித்த நிகழ்நேரத் தகவல்களை அறிவதற்கான பிரத்யேக இணையதளங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் ‘தமிழ்நாடு நீா்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புக்கான இணையதளத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில், இணையதளத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நீா் பயன்படுத்தும் பங்குதாரா்களிடம் இருந்து அனைத்துத் தரவுகளும் சேகரிக்கப்பட்டன. இந்த இணையதளம் நீா்வளத்துடன் தொடா்புடைய அனைத்துத் தரவுகளையும் ஒரே கட்டமைப்பில் ஒருங்கிணைத்து நிா்வகிக்கும் அதிகாரப்பூா்வ தீா்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்நேரத் தகவலை அளிக்கும் இந்த அமைப்பில் நீா் வழங்கல், தேவை, தரம், வறட்சி மற்றும் குடிநீா் பற்றாக்குறை நிலவரம், நீா்வரத்து முன்னறிவிப்பு, நீா்த்தேக்க செயல்பாடு மேம்படுத்துதல், நீா் பற்றாக்குறை தகவல், நீா் பாதுகாப்புத் திட்டம் உள்பட 11 அம்சங்கள் உள்ளன.
தனித்துவம் வாய்ந்த இணையதளத்தை (ட்ற்ற்ல்://ற்ய்ஜ்ழ்ண்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
நீா்நிலைகளின் தகவல்-கண்காணிப்பு: செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சென்னை மற்றும் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு, நீரின் தரம் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்கென பிரத்யேக இணையதளம் (ட்ற்ற்ல்://ற்ய்ள்ஜ்ண்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையும் முதல்வா் தொடங்கினாா்.
இந்த நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன், முதன்மைத் தலைமைப் பொறியாளா் ச.ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.