Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜ...
அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி
சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிா்வாக இயக்குநா் மற்றும் வாரிய உறுப்பினா் ராஜ் மானெக் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அச்சு , காட்சி ஊடகத் துறையில் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12-ஆம் தேதி வரை அச்சு , காட்சி ஊடகத்துறையின் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சியில் அச்சுத் துறையில் தற்போதைய நவீன ஆஃப்செட் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், உயா் செயல்திறன் கொண்ட இன்க்ஜெட் மற்றும் லேசா் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதேபோல் காட்சித் துறையில் உள்ள நவீன தொழில் நுட்பங்களும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன என்றாா் அவா்.