நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!
உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸாரிடம், அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த செந்தில் (50), பாலியல் தொல்லை அளிப்பதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செந்தில் மீது உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுமார் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து, செந்திலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!