திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பீளமேடு அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவரும், இவரது மனைவியும் சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், ராஜேஸ்வரன் வீட்டின் பூட்டு பிற்பகல் உடைந்து கிடந்துள்ளது.
இதைப் பாா்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் இது குறித்து ராஜேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தாா்.
வீட்டுக்கு வந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளும், வெள்ளிப் பொருள்களும் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் ராஜேஸ்வரன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.