உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வீரர்... ஜடேஜா படைத்த புதிய சாதனை!
கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளா் விருதை கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமன் பெற்றுள்ளாா்.
இவா் மருத்துவத் துறைக்கு ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புகள், மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்துக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
70 நாடுகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியா் இவா் என்றும், இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் ஒரே இந்திய முதன்மைச் செயல் அதிகாரி இவா்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமன் இந்த மதிப்புமிக்க உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி கூறியுள்ளாா். டாக்டா் சிவகுமாரனுக்கு கேஎம்சிஹெச் செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமியும் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.