தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
6 போட்டிகளில் 4 அரைசதங்கள்... அசத்தும் பியூ வெப்ஸ்டர்!
ஆஸ்திரேலியாவின் புதிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5-ஆவது போட்டியில் ஆஸி. அணிக்காக அறிமுகமானார் பியூ வெப்ஸ்டர். 31 வயதாகும் இவர் முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஆஸி. அணியில் இடம் கிடைத்தது.
முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த இவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆஸி. அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட்டிலும் அரைசதம் அடித்த வெப்ஸ்டர், இரண்டாவது டெஸ்ட்டில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
6 போட்டிகளில், குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் 9 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
பியூ வெப்ஸ்டர் 57, 39, 23, 31, 72, 9, 11, 63, 60 என சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 45.63ஆக இருக்கிறது.
பந்துவீச்சில் வெப்ஸ்டர் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக மிளிரும் வெப்ஸ்டருக்கு ஆஸி. ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.