அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
டிரம்ப்பின் சம்பளம் எவ்வளவு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஊதிய விவரம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஊதிய விவரக் குறிப்பில், அதிபர் வருமானமாக டிரம்ப்புக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் (சுமார் ரூ. 3.4 கோடி) அளிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பயணத்துக்காக ரூ. 85.4 லட்சம், இதர செலவுகளுக்காக ரூ. 42.7 லட்சம், பொழுதுபோக்குக்காக ரூ. 16.2 லட்சமும் வழங்கப்படுகிறதாம். மொத்தமாக, அவருக்கு ரூ. 4.85 கோடியை வெள்ளை மாளிகை அளிக்கிறது.
அவரின் துணை உதவியாளர்களுக்கு ரூ. 1.3 கோடி முதல் ரூ. 1.49 கோடி ஆண்டு வருமானமும், சிறப்பு உதவியாளர்களுக்கு ரூ. 1.28 கோடி வரையிலும், அதிபருக்கான உரை எழுத்தாளர்களுக்கு ரூ. 78 லட்சம் வரையிலும், 108 இளநிலை ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 68.3 லட்சம் வரையிலும் சம்பளம் வழங்கப்படுகிறது.
டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது வழங்கப்பட்ட ஊதியத்தை, பல்வேறு அரசுத் துறைகளுக்கு நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாவது பதவிக்காலத்திலும் அவ்வாறு வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!