ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தார்.
வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் 150 ரன்களைக் கடந்து இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறினர். ஹாரி ப்ரூக் 158 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேமி ஸ்மித் 184* ரன்கள் (21 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
முதல் இன்னிங்ஸில் 184* ரன்கள் குவித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஜேமி ஸ்மித் வரலாறு படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
1️⃣8️⃣4️⃣*
— England Cricket (@englandcricket) July 4, 2025
The highest score by an England wicket keeper in Test history.
Mustard. pic.twitter.com/U7Sk82uSqz
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விக்கெட் கீப்பர்கள்
ஜேமி ஸ்மித் - 184* ரன்கள், 2025 (இந்தியாவுக்கு எதிராக)
அலெக் ஸ்டீவர்ட் - 173 ரன்கள், 1997 (நியூசிலாந்துக்கு எதிராக)
ஜானி பேர்ஸ்டோ - 167* ரன்கள், 2016 (இலங்கைக்கு எதிராக)
அலெக் ஸ்டீவர்ட் - 164 ரன்கள், 1998 (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)
ஜோஸ் பட்லர் - 152 ரன்கள், 2020 (பாகிஸ்தானுக்கு எதிராக)
ஜானி பேர்ஸ்டோ - 150* ரன்கள், 2016 (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)
England wicketkeeper Jamie Smith has created history in Test cricket.
இதையும் படிக்க: 15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!