செய்திகள் :

திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு துவக்கம்

post image

திங்கள்நகரில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து திங்கள்நகரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா குத்துவிளக்கேற்றி கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவை துவக்கிவைத்தாா்.

ஆட்சியா் பேசியதாவது: மாவட்டத்தில் 49 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை மருத்துவமனைகள், ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவில் அனைத்து நிலையங்களில் இருந்தும் பெறப்படும் சாணம், ரத்தம், பால் முதலிய மாதிரிகளை பரிசோதனை செய்து, நோய்களை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். பறவைக் காய்ச்சல் நோயை கண்டறிதல், அதற்கான மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புதல், அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்படும்போது மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடி ஏற்படுத்தி நோயுற்ற கோழிகளின் போக்குவரத்தை தடுத்து நிறுத்துதல், கால்நடைகளில் ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்க பரிசோதனைகள் மேற்கொண்டு அதற்கான நோய் காரணியை கண்டறிந்து சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இப் பிரிவு மேற்கொள்ளும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்வில் மாநில உணவு ஆணைய தலைவா் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ், திங்கள்நகா் பேரூராட்சி தலைவா் சுமன், மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா்முகமது கான், துணை இயக்குநா் தங்கராஜ், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க

குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தல... மேலும் பார்க்க

இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85... மேலும் பார்க்க

களியல் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி சுவா் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தம்

குமரி மாவட்டம் களியல் அருகே வனத்துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி கட்ட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன. களியல் சந்திப்பில் களியல் வனச்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி., எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். பி., எம்.எல்.ஏ. ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக கன்னியாகும... மேலும் பார்க்க