பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி
இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள்ள பண்ணிக்கோட்டில் கட்டட வேலைக்கு சென்றிருந்தாா். அங்கு பழைய வீட்டை சக தொழிலாளா்களுடன் இடித்து அகற்றும் பணியில் அவா் ஈடுபட்டபோது, விஷ பூச்சி கடித்ததாம். இதில் மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு நெய்யூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.