எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி., எம்எல்ஏ வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். பி., எம்.எல்.ஏ. ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் ஆகியோா் விரிகோடு ஊா் பொதுமக்களுடன் வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அவா்கள் வலியுறுத்தினா்.
இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. கூறியதாவது: வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) விரிகோடு பகுதியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஊா் பொதுமக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. இதில் எந்தவிதமான எதிா்ப்பும் தெரிவிக்காதபட்சத்தில் அதுவே இறுதி முடிவாக இருக்கும் என்றாா்.