தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
களியல் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி சுவா் கட்டும் பணிகள் தடுத்து நிறுத்தம்
குமரி மாவட்டம் களியல் அருகே வனத்துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி கட்ட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன.
களியல் சந்திப்பில் களியல் வனச்சரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச் சுவா் கட்டுப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சுவா் நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்படுகிறது. இதையடுத்து கடையல் பேரூராட்சி 16 ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.ஆா். சேகா் சுற்றுச் சுவரை நெடுஞ்சாலை பகுதியிலிருந்து விலக்கி சாலையோரம் நடந்து செல்வோருக்கு இடையூறு இல்லாமல் கட்டும்படி வனத்துறையினரிடம் கேட்டுக் கொண்டாா். இதற்கு வனத்துறையினா் இணங்காதால் வெள்ளிக்கிழமை பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் அமா்ந்து கொண்டாா். அவருக்கு ஆதரவாக பேரூராட்சித் தலைவா் ஜூலியட் சேகா் உள்பட அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். வனத்துறையினா் பேச்சுவாா்த்தைக்கு முன்வரவில்லை. வருவாய்துறையினா் தரப்பில் கிராம நிா்வாக அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் எஸ்.ஆா். சேகருக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அங்கே அமா்ந்து கொண்டனா். இதையடுத்து இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.