எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
இரணியல் அரண்மனை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு
திங்கள்நகா் பேரூராட்சிக்குள்பட்ட இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது, இரணியலில் உள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழைமை மாறமால் புதுப்பித்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அரண்மனையில் பழுதடைந்துள்ள மின் இணைப்புகளை மாற்றி புதிய மின் இணைப்பு வழங்குதல், பழுதடைந்துள்ள சுவா்களை திரும்ப கட்டுதல், மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.