செய்திகள் :

'சோறு தண்ணீர் இல்லாமல் கட்சியை வளர்த்து எடுத்தவர் ராமதாஸ் ஐயா; அன்புமணிக்கு..!' - ஜி.கே மணி உருக்கம்

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

ராமதாஸ், அன்புமணி

இந்நிலையில் இன்று( ஜூலை 5)  ஜி.கே மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``எனக்கு முதுகுதண்டு பிரச்னை இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுத்துகொண்டிருக்கிறேன். இத்தனை வருடங்களாக ராமதாஸ் ஐயாவுடன் கட்சியில் பயணம் செய்துவிட்டேன். இறுதிவரை பயணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.

மன உளைச்சலில் இருக்கிறோம்

பாமகவில் இருக்கும் பிரச்சனையால் நான் மட்டுமின்றி எங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் மன உளைச்சலில் இருக்கிறோம். வேதனையில் இருக்கிறோம். பழைய நிலைமைக்கு கட்சி திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இதற்கு ஒரே தீர்வு, ராமதாஸும், அன்புமணியும் மனம் விட்டு பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

ராமதாஸ் - ஜி.கே. மணி - அருள்
ராமதாஸ் - ஜி.கே. மணி - அருள்

சோறு தண்ணீர் இல்லாமல் கட்சியை வளர்த்து எடுத்தவர் எங்கள் ராமதாஸ் ஐயா. அதேபோல அன்புமணிக்கு கட்சியில் முதலமைச்சர் பதவி கொடுத்து முன்னுரிமைப்படுத்தி இருக்கிறோம். அதனால் இரண்டு சக்திகளும் ஒன்றிணைந்தால் தான் மீண்டும் கட்சிக்கு வலிமையாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததின் பின்னணி என்ன?

'தவெக செயற்குழுக் கூட்டம்!'தவெகவின் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. தவெக தலைமையில்தான் கூட்டணி. விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறுதியிட்டு கூறுவதற்காகவே இந்தக் கூட்டத்தை நடத்தி ம... மேலும் பார்க்க

`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்... மேலும் பார்க்க

``வயசாகிடுச்சுனு நானேதான் சீட் வேண்டாம்னேன்; வேறெந்த பிரச்னையும் இல்லை" - திமுக எம்.பி.சண்முகம்

திமுக-வின் தொழிலாளர் அணியான தொ.மு.ச-வில் ஆங்காங்கே நடக்கும் உள் பஞ்சாயத்துகள் நீதிமன்றம் வரை சென்றிருப்பது திமுக தலைமையை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.தற்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருக்கு... மேலும் பார்க்க

'விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால்..!' - கனிமொழி சொல்வது என்ன?

நேற்று (ஜூன் 4) திருநெல்வேலியில் நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு... மேலும் பார்க்க