"இந்த வெற்றிக்குப் பிறகு நிறைய படம் வரும்!" Director Ram | Siva | Paranthu Po
``காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்'' - நீதிமன்றத்தில் முறையிட்ட உறவினர்; 6 பேர் மீது FIR பதிவு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் வாசிம்(22). இவர் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மதோபூரில் உள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வாசிமின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது காவல்துறை அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாசிமின் உறவினரான அலாவுதீன் நடுவர் நீதிமன்றத்தில் 10 மாதத்துக்குப் பிறகு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், ``கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலையில் வாசிம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் சர்த் சிங், கான்ஸ்டபிள்கள் சுனில் சைனி மற்றும் பிரவீன் சைனி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது தடிகளால் கொடூரமாகத் தாக்கி அவரை அருகில் இருந்த குளத்தில் வீசியிருக்கின்றனர். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட உள்ளூர்வாசிகள் சம்பவத்தைப் பார்த்திருக்கின்றனர்.
அவர்கள் வாசிமை மீட்க முயன்றபோது, தலையிட்டால் போலீசார் அவர்களைச் சுட்டுவிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். அடுத்த நாள், கங்னஹார் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தபோதுகூட அவர்கள் அதை ஏற்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில்,``வாசிம் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலை ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் இருந்தனர். காவல்துறை அதிகாரியை பார்த்ததும் வாசிம் பைக்கை நிறுத்திவிட்டு சடலம் கிடந்த குளத்தில் குதித்துவிட்டார்.

அப்போதே அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவரின் வாகனத்தை பரிசோதித்தபோது அதில் மாட்டிறைச்சி இருந்தது. அப்போது வாசிமின் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். அவர்கள் போலீஸாரைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்றனர். வாசிமை காவல்துறை அதிகாரிகள் அடித்து சுட்டுக் கொன்றதாகவும், குளத்தில் அவரின் உடலை வீசியதாகவும் குற்றம் சாட்டினர்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட உத்தரகாண்ட் தலைமை நீதிபதி, ``இரு தரப்பு வாதத்திலும் வாசிம் உயிரிழக்கும்போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்திருக்கின்றனர். நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும், அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் கடினமான பொருளால் ஏற்பட்டதாகவும் பிரேத பரிசோதனையில் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. எனவே வாசிம் இறக்கும்போது உடன் இருந்த ஆறு அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து முறையாக விசாரிக்க வேண்டும்." என உத்தரவிட்டுள்ளார்.