திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவம்: ஜூலை 7ல் கொடியேற்றம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவம் ஜூலை 7-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவ விழாவும் ஒன்றாகும்.
தட்சணாயன புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவ விழாவானது பத்து நாள்கள் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா வருகிற 7ஆம் தேதி(திங்கள் கிழமை) சுவாமி முன்புள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
This year's Ani month Brahmotsavam at the Arunachaleswarar Temple in Tiruvannamalai will begin with the flag hoisting on July 7th.