நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு! உலக வங்கிக்கு எதிராக மத்திய அமைச்சர் பேச்சு!
இந்தியாவில் வருமான சமத்துவம் முன்னேறி வருவதாக உலக வங்கி அறிக்கைக்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்வந்தர்களின் கைகளில்தான் செல்வம் குவிந்து கிடக்கிறது.
ஆனால், இதுபோன்று நடக்கக் கூடாது. செல்வத்தை பரவலாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பொருளாதாரத்தைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகள் துறை 52 - 54 சதவிகிதமும், உற்பத்திகள் 22 - 24 சதவிகிதமும் பங்களிக்கின்றன. 65 முதல் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத் துறையில் ஈடுபட்டாலும், அதன் பங்களிப்பு சுமார் 12 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
வருமான சமத்துவத்தில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இதையும் படிக்க:வருமானத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!