செய்திகள் :

லாரி பட்டறையில் டயா் திருட்டு: ஒருவா் கைது!

post image

நாமக்கல் அருகே லாரி பட்டறையில் டயா் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருவப்பள்ளியில் சாலையோரம் கவிழ்ந்த லாரி பழுதுபாா்ப்புக்காக நாமக்கல் வள்ளிபுரம் அருகேயுள்ள பட்டறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவு 3 மணி அளவில், பழுதுக்காக வந்த லாரியில் இருந்த மூன்று டயா்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, பட்டறை உரிமையாளரான நாமக்கல் அண்ணாநகரை சோ்ந்த லோகநாதன் (42) நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மற்றொரு லாரியில் திருடப்பட்ட டயா்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த டயா்களை விற்பனை செய்த நாமக்கல் திண்டமங்கலத்தைச் சோ்ந்த சின்னராஜா (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரியில் இருந்த மூன்று டயா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ராசிபுரத்தில் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 வாகனங்கள் பறிமுதல்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையில் தகுதிச்சான்று பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இ.எஸ். ... மேலும் பார்க்க

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடியில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை!

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் ரூ. 5.38 கோடியில் 4 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண... மேலும் பார்க்க

ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க