செய்திகள் :

அனுஷ்காவின் காதி வெளியீடு ஒத்திவைப்பு!

post image

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், படத்திற்கான புரமோஷன் பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காதி படத்தின் தரத்தை மேம்படுத்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், இப்படம் செப்டம்பர் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கல் மேட்சன் காலமானார்!

actor anushka, vikram prabhu's ghaati movie postponed for technical reasons.

திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவம்: ஜூலை 7ல் கொடியேற்றம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவம் ஜூலை 7-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நட... மேலும் பார்க்க

எம்மா ரடுகானு கூறுவது உண்மைதான்... 2023-இன் அனுபவம் பகிர்ந்த சபலென்கா!

விம்பிள்டன் தோல்விக்கு எம்மா ரடுகானு கூறிய காரணத்துக்கு சபலென்காவும் ஆமோதித்துள்ளார். விம்பிள்டன் மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்... மேலும் பார்க்க

டென்னிஸ் ராக்கெட் இழைநார்களினால் தோல்வி..! எம்மா ரடுகானு விரக்தி!

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற தனது டென்னிஸ் - ராக்கெட்டின் இழைநார்கள் (strings) கோளாறாக இருந்தது ஒரு காரணம் என எம்மா ரடுகானு கூறியுள்ளார். மகளிர் ஓபன் பிர... மேலும் பார்க்க

100 நாடுகளில் வெளியாகும் கூலி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் சுமார் 100 நாடுகளின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்... மேலும் பார்க்க

மாரீசன் வெளியீட்டுத் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தி... மேலும் பார்க்க