IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Impe...
பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்
பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டாக பிரிய வாய்ப்பில்லை. அப்பாவும், மகனும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து தேர்தலை ஒன்றாக சந்திப்பார்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு தாமதமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இருந்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
அதிமுக கூட்டணியில் முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் தான் முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அதற்கு அந்த கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடிதான் கருத்துக் கூற வேண்டும். திமுக, பாஜகவை கொள்கை எதிரி என கூறும் விஜய், அதிமுகவை பற்றி வெளிப்படையாக எதுவும் கூறாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என கேள்வி எழுகிறது. அதற்கு விஜய் பதில் கூற வேண்டும்.
பா.ஜ.க தான் சிவசேனையை உடைத்தது. மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அவர்கள் உடைப்பார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமல்லாமல் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அவர்கள் பிரிப்பார்கள். இந்த நிலையில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே மாநில உரிமைகளுக்காக காலம் தாழ்ந்தாவது இணைந்துள்ளார்கள் என்றால் அதை வரவேற்கிறேன். கச்சத்தீவு குறித்து ஒன்றிய ஆட்சியாளர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கச்சத்தீவு தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட தேசத்திற்கு எதிரான கருத்து. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் கலாசார உரிமையை மீட்டுத் தர இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். அஜித் குமார் கொலை விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்துத்துள்ளார்.
அவரின் தாயாரின் வருத்தம் தெரிவித்துள்ளார். வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார். இது சற்று ஆறுதல் தருகிறது. இருந்த போதும் இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் வழக்கம் போல் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என அரசியல் அணுகுமுறைகளையே கையாள்கிறார்கள் என்றார்.
இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
Thol. Thirumavalavan says There is no possibility of the PMK splitting into two.