IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Impe...
பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி
பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
அன்புமணி, திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் இருந்த பாமக தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் உருவாக்கியுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி,
"பாமகவில் அனைவரும் குழப்பமடைந்து மன வேதனையில் இருக்கிறோம். இது மாற வேண்டும். பழைய நிலைமைக்கு கட்சி வர வேண்டும். அதுதான் அனைவரின் விருப்பமும். அதற்கு ராமதாஸும் அன்புமணியும் ஓரிடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும்.
கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மன உளைச்சலில் உள்ளோம். இருவரும் மனம் விட்டுப் பேசினாலே தீர்வு கிடைக்கும். இருவரும் சேர்ந்தால் நல்லது, இல்லையெனில் பாமக நலிவடைந்து விடும். பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு எந்த கட்சியும் காரணம் அல்ல" என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் பாமக செயற்க்குழு கூட்டம் வரும் 8-ம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.