``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தக...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியில் இருந்து 50,000 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவை பொருத்து, காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 23,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 32,000 கனஅடியாகவும், மாலை 43,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை காலை 43,000 கனஅடியில் இருந்து 50,000 கன அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள 10-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிப்பதற்கு 11-ஆவது நாளாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு சுமாா் 70,000 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.