ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுங்குமிடம் தகர்ப்பு! ஆயுதங்கள் பறிமுதல்!
பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தேர்தல் ஆணைய உத்தரவு தன்னிச்சையானது என்றும், பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை இது பறிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியது.
பொதுவாக, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.