யூ டியூப் சானல்களின் வருவாய்க்கு ஆபத்து! ஜூலை 15 முதல் புதிய விதி!
கதாநாயகனாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்! நாயகி இவரா?
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
திரைப்பட இயக்கத்துடன் நடிப்பு ஆர்வம் கொண்டவரான இவர், சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அபிஷன் ஜீவிந் புதிய படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு, “கரெக்டட் மச்சி” (corrected machi) எனப் பெயரிட்டுள்ளனராம். நாயகியாக பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர்.
இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசில் - நிவின் பாலி கூட்டணியில் புதிய படம்!
tourist family director turnd as a hero film titled 'corrected machi' female lead is ananswara rajan