செய்திகள் :

ஊட்டி: மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், அலறித்துடித்த பயணிகள்! என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலைப்பாதை வழியாக நேற்று இரவு குளித்தலைக்கு திரும்பியிருக்கிறார்கள்.

வாகன விபத்து

குறும்பாடி அருகில் வேன் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியிருக்கிறது. இதைக்கண்டுப் பதறிய பயணிகள் அலறித்துடித்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக இடதுபக்க சுவரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. வேனுக்குள் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

ரத்தம் சொட்ட வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணிகளை மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்த ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன விபத்து

இது குறித்து காவல்துறையினர், " கீழ்நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேனில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இடதுபுற தடுப்பு சுவற்றில் மோதி வேனை நிறுத்தியிருக்கிறார் ஓட்டுநர் . வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். 14 பேர் காயமுற்ற இந்த விபத்தில் குளித்தலையைச் சேர்ந்த 44 வயதான சாமிநாதன் என்பவர் மட்டும் துரதிஷ்டவசமாக உயிரிழந்திருக்கிறார். இதுபோன்ற மலைப்பாதைகளில் 2- ம் கியரில் கீழே இறங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Kerala: மருத்துவமனை இடிந்து பெண் பலி; ``ஆபரேஷன், சிகிச்சை வசதி எங்கும் இல்லை'' - காங்கிரஸ் கண்டனம்

கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 68 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடத்தின் டாய்லெட் பகுதி நேற்று உடைந்து விழுந்தது. டாய்லெட்டில் குளிக்கச் சென்ற தலையோலப்பறம்பு பகுதியைச் சேர... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெட... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

நேற்று காலை, 8.15 - 9.35 மணியளவில், தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் வெடித்தது தான் இந்த விபத்திற்... மேலும் பார்க்க

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ... மேலும் பார்க்க

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குன்னூர் நகரின் நுழைவு... மேலும் பார்க்க