Taliban: தாலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா! - காரணம் தெரியுமா?
ஆஃப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தாலிபான் அரசு பல நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சில இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முதன்முறையாக தாலிபான் அரசை முறையாக ஜூலை 3 அன்று அங்கீகரித்திருக்கிறது.

இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து நல்ல ஒத்துழைப்பையும், உத்தரவாதத்தையும் ரஷ்யா பெற்றது. ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மூலம் இருநாடுகளும் உற்பத்தியில் ஒத்துழைப்பை வளர்க்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவின் அங்கீகாரத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எனத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, ``ரஷ்யாவின் இந்த முடிவுமற்ற நாடுகளுக்கு ஒரு நல்ல உதாரணம்" எனத் தெரிவித்திருக்கிறார்.