உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
டிஎன்பிஎல்: அஸ்வினின் திண்டுக்கல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?
டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியின் இன்றிரவு (ஜூலை 4) திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதுகின்றன.
லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது.
குவாலிஃபயர் 1 போட்டியில் திருப்பூர் அணியிடம் தோல்வியுற்று குவாலிஃபயர் 2-க்கு கீழிறங்கியது.
லீக் போட்டியில் 3-ஆவது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எலிமினேட்டரில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது.
திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் இன்றிரவு 7.30 மணிக்கு குவாலிஃபயர் 2 போட்டி நடைபெறுகிறது.
திண்டுக்கல் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் தொடர்ச்சியாக நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
எலிமினேட்டர் போட்டியில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் எடுத்து, பேட்டிங்கில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.
குவாலிஃபயர்-2 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஃபேன்கோட் செயலியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையாகப் பார்க்கலாம்.