உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
ஜடேஜா குறித்து நடுவரிடம் தொடர்ந்து முறையிட்ட பென் ஸ்டோக்ஸ்! எதற்காக?
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில், 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 4) இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
நடுவரிடம் முறையிட்ட பென் ஸ்டோக்ஸ்
ஆட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 3) இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடுவது குறித்து நடுவர்களிடம் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் முறையிட்டது குறித்து ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு ஆடுகளத்தை விளையாடுவதற்கு கடினமாக்க வேண்டும் என எந்த எண்ணமும் இல்லை. எனக்கு நானே ஆடுகளத்தை கடினமாக்கிக் கொண்டதாக நினைக்கிறேன். வேகப் பந்துவீச்சாளர்களும் ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடுகிறார்கள். அதனால், அதனை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நான் ஆடுகளத்தில் ஓடுவதாக அவர் (பென் ஸ்டோக்ஸ்) தொடர்ந்து நடுவர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். ஆடுகளத்தில் ஓடி பேட்டர்களுக்கு ஆடுகளத்தை கடினமாக்க வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லை. ஓரிரு முறை தற்செயலாக ஆடுகளத்தின் ஆபத்தான பகுதிகளில் ஓடியிருப்பேன். ஆனால், எதையும் வேண்டுமென்று செய்யவில்லை என்றார்.
England captain Ben Stokes has repeatedly complained to the umpire about Indian all-rounder Ravindra Jadeja.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வீரர்... ஜடேஜா படைத்த புதிய சாதனை!