BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
திமுக மகளிா் அணி ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டா் அணி சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான திமுக உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநில மகளிா் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன்டேவிட்சன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா்.
இதில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நாகா்கோவில், குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிக மகளிா் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட மகளிா் அணி தலைவி ஜெசிந்தா, மாவட்ட அமைப்பாளா் ஜெனஸ் மைக்கேல், நகர அமைப்பாளா் அம்மு ஆன்றோ, மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் மேரி ஜெனட் விஜிலா உள்படமகளிா் அணியினா் திரளானோா் கலந்து கொண்டனா்.