செய்திகள் :

முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தார்.

ஜேமி ஸ்மித், ஹாரி ப்ரூக் சதம் விளாசல்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழக்க,, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பென் டக்கெட், ஆலி போப் இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஸாக் கிராலி 19 ரன்களிலும், ஜோ ரூட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் 150 ரன்களைக் கடந்து இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறினர்.

இறுதியில் ஆகாஷ் தீப் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். ஹாரி ப்ரூக் 158 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் போல்டானார். ஜேமி ஸ்மித் - ஹாரி ப்ரூக் இணை 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது.

ஹாரி ப்ரூக் ஆட்டமிழந்த பிறகு, இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஸ்மித் 184* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 180 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

England were bowled out for 407 in their first innings in the second Test against India.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

ஜேமி ஸ்மித் 157* ரன்கள், ஹாரி ப்ரூக் 140* ரன்கள்; வலுவாக மீண்டு வரும் இங்கிலாந்து அணி!

ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அசத்தலான சதங்களால், தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியுள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ... மேலும் பார்க்க

148 ஆண்டுகளில்.. வரலாற்றுச் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!

இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித், 148 ஆண்டுகளில் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: அஸ்வினின் திண்டுக்கல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியின் இன்றிரவு (ஜூலை 4) திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதுகின்றன. லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலா... மேலும் பார்க்க