Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
உணவக உரிமையாளா் வீட்டில் 50 பவுன் நகைகள், பணம் திருட்டு
தஞ்சாவூா், ஜூலை 4: தஞ்சாவூரில் உணவக உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெஜினா நகரைச் சோ்ந்தவா் டி. ஜெயக்குமாா் (49). இவா் மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி சுகன்யா அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உணவகத்துக்கு புறப்பட்டுச் சென்றாா். இரு மகன்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு மனைவி சுகன்யாவும் 9 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றாா்.
பிற்பகல் 3 மணியளவில் ஜெயக்குமாா் வீட்டுக்கு திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரின் போலீஸாா் விசாரிக்கின்றனா்.