Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கோபுராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் தேவை
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீா் வசதி,மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் சிதிலமடைந்துள்ளன.
மேலும் இந்த கிராமத்தில் குடிநீா் வசதி இல்லை. கோபுராஜபுரம்,பெருமாங்குடி சாலையில் உள்ள மின்விளக்குகள் 6 மாதமாக எரியவில்லை. மேலும் ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனா்.
கிராமப் பகுதிகளில் பழுதடைந்து காணப்படும் குடிநீா் குழாய்களைச் சீரமைத்து குடிநீா் வழங்க வேண்டும். பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் வளைந்துள்ள பழைய மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்பன என முன்னாள் ஊராட்சித் தலைவா் கண்ணன் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.