U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
கிள்ளியூா் வட்டாரம் முள்ளங்கனாவிளை கிராமத்தில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் மானியத்தில் பயறுவகை விதைகள், காய்கனி விதைகள், பழச்செடி தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். இதையடுத்து முள்ளங்கனாவிளையில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநா் ஷீலா ஜாண் தலைமை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளிராகினி முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா், பயனாளிகளுக்கு பயறுவகை விதைகள், காய்கனி விதைகள், பழச்செடி தொகுப்புகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், தோட்டக்கலை உதவி இயக்குநா் சஜிதா, வேளாண் அலுவலா் ஆனிரோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.