Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
திருவையாறு அருகே புதிய வாழைக்கன்றுகள் அறிமுகம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வாழைக்கன்று ரகங்கள் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வைட்டமின் ஏ சத்துள்ள என்.ஆா்.சி.பி. 16, இரும்பு சத்துள்ள என்.ஆா்.சி.பி. 20, சா்க்கரைச் சத்து குறைவாக உள்ள பிசாங் லில்லின் ஆகிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ரகங்கள் ஒவ்வொரு மாவட்டமாக அறிமுகம் செய்யப்படுகின்றன. தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவையாறு அருகே வடுகக்குடி கிராமத்தில் வாழை விவசாயி எம். மதியழகன் தோட்டத்தில் வியாழக்கிழமை மாலை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, 200 வாழைக்கன்றுகள் வழங்கப்பட்டன.
