Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!
காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி
காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். அதேநேரத்தில் தெற்கு காஸாவில் நிவாரணப் பொருள்களை வாங்க காத்திருந்த மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 20 பேர் பலியானதாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
21 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவாா்த்தை மூலம் 60 நாள் போா் நிறுத்தத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் இஸ்ரேல் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனியா்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது.