செய்திகள் :

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி - யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

post image

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது.

இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது.

நெட்வொர்க் ஸ்டேட் கனவு

“Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இணைய வழியில் ஒருங்கிணைத்து, ஒரு புதிய டெக் நாட்டை உருவாக்க பாலாஜி திட்டமிட்டு வருகிறார்.

தீவில் நடக்கும் நிகழ்வுகள்

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனரான நிக் பீட்டர்சன் இந்த திட்டத்தில் சேர்ந்து, தீவின் மெய்நிகர் சுற்றுப்பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். "ஆர்வத்தில் கட்டிவிட்டு, கைவிடப்பட்ட தீவு ஒரு ஸ்டார்ட்அப் சொசைட்டிக்கு மாறும்போது எப்படி இருக்கும்" என்று அவர் வீடியோவை தலைப்பிட்டு ஜிம், வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் நாளை அதிகாலையில் தொடங்குவது பற்றிய ஒரு பார்வையை அளித்தார்.

அந்த வீடியோவில் மாணவர்கள் அதிகாலை எழுந்து ஜிம் செஷன்களில் பங்கேற்று, பின்னர் வகுப்புகளில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

வித்தியாசமான முயற்சி

பாலாஜி ஸ்ரீநிவாசனின் இந்த திட்டம் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஒரு புதிய வாழ்வுமுறை முயற்சியாகவும், வருங்காலத்தில் நாடுகள் உருவாகும் விதம் எப்படி மாறும் என்பதை சோதனை செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் தொழில்நுட்ப உலகில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்தலைமுறையினர்களும் தொழில்நுட்ப ஆர்வலர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

rep image

யார் இந்த பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன்?

அமெரிக்காவின் பிரபல தொழில்முனைவோரும், கிரிப்டோகரன்சி நிபுணருமான பாலாஜி எஸ். ஸ்ரீனிவாசன் மே 24, 1980 அன்று தமிழகத்தில் பிறந்து, நியூயார்க் ப்ளைன்வியூவில் வளர்ந்திருக்கிறார்.

இவர் தொழில்நுட்ப துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். பல நிறுவனங்களில் பணியாற்றிருக்கிறார்.

பாலாஜி ஸ்ரீனிவாசன், பரவலாக்கம், கிரிப்டோகரன்சி, பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால சமூக அமைப்புகள் குறித்த தனது புதிய சிந்தனைகளை சமூக வலைதளங்களிலும், நேரடி உரையாடல்களிலும் பகிர்ந்து வருகிறார். The Network State என்ற அவரது புத்தகம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

இவர் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் மற்றும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜினியரிங் வளர்ச்சிகள்

ஹெட்போன்கள்/ இயர்போன்கள் இன்று நம் வாழ்வின் ஒரு அங்கமாக காதோடு காதாகிவிட்டது. வேலையோ, ஓய்வோ, பயணமோ அல்லது உடற்பயிற்சியோ எல்லா சூழ்நிலையிலும் காதில் இசையை ஒலிக்கவிட்டவாறு உலா வருகிறோம். தொழில்நுட்ப உலக... மேலும் பார்க்க

கேரளா: பழுதுபார்க்க சாத்தியமில்லை; ரூ.1000 கோடி இங்கிலாந்து போர் விமானத்தை பிரித்தெடுக்க திட்டம்?

கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இங்கிலாந்தின் ராயல் கடற்படையைச் சேர்ந்த F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின்... மேலும் பார்க்க

Post office-ல் இனி UPI மூலம் பணம் செலுத்தும் வசதி; சோதனை முயற்சியில் வெற்றி

யு.பி.ஐ - இது இந்தியாவில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளின் இண்டு இடுக்குகளில் கூட உட்புகுந்துவிட்டது. இனி போஸ்ட் ஆபீஸ்களிலும் யு.பி.ஐ வசதி வரப்போகிறது.இதுவரை இந்தியாவின் போஸ்ட் ஆபீஸ்களில் இந்த வசதி இல்ல... மேலும் பார்க்க

House Uplifting: பூமிக்கு மேலே ஒரு அடி உயரும் அடையாறு `மத்திய கைலாஷ் கோயில்'

சென்னை அடையாறு, சர்தார்பட்டேல் ரோடு மற்றும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்பில் உள்ள நகரத்தின் மிக முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது மத்திய கைலாஷ் கோயில். சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் தொன்மை ... மேலும் பார்க்க

முதல் எலெக்ட்ரிக் விமான சேவை; வெறும் ரூ. 694, 96% விலை குறைவு; வான்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்!

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள் வரிசையில் இப்போது எலெக்ட்ரிக் விமானமும் வந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜிஸ் (BETA Technologies) என்ற நிறுவனம் 2022 ம... மேலும் பார்க்க

US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடைபெற்றுவரும் சூழலில், அமெரிக்கா ராணுவ ரீதியில் நேரடியாக ஈரானைத் தாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில் கவனம் பெறுகிறது வாஷிங்டனுக்கு கொண்டுவரப்பட்ட டூம்ஸ்டே பிளேன். E-4B... மேலும் பார்க்க