செய்திகள் :

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

post image

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, காவல்துறை யார் யாரோ தலைமைச் செயலகத்தில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட எஸ் பி, டிஎஸ்பி என்ன செய்கிறார்கள் என்றால் தலைமைச் செயலத்திற்கு யாரோ போன் செய்து சொல்ல திருபுவனத்தில் அஜித் குமாரை போலீஸார் கடத்திச் சென்று படுகொலை செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மிக மோசமான ஒரு சூழ்நிலையில் தினசரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அஜித் குமார் கொலை வழக்கில் நீதிபதிகள் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். நான் நேரடியாக திருபுவனம் செல்கிறேன் துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்று செல்கிறேன். காவல் காக்கக்கூடிய காவலர்களே இப்படிப்பட்ட குற்றங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஈஸியாக சாரி என்று சொல்கிறார். ஏற்கனவே 24 லாக்அப் மரணம் நடந்திருக்கிறது, எதையும் லாக்அப் மரணம் என்று சொல்ல முடியாது, போலீஸாரால் செய்யப்பட்ட படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவை அனைத்திற்கும் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். முழுமையான நீதி விசாரணை வேண்டும், சிபிஐ நீதி விசாரணை வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிகிதா பெயரில் 2011 இல் மோசடி வழக்குகள் உள்ளன. தலைமைச் செயலகத்தில் யாருக்கு போன் செய்தார்? அந்த அதிகாரி யார், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் 7ஆம் தேதி கலந்து கொள்கிறேன். எல்லா இடங்களிலும் பாஜக நிர்வாகிகள் எல்லோரும் கலந்து கொள்வார்கள்.

இனி எல்லா போராட்டங்களிலும் ஒன்றிணைந்து (அதிமுக, பாஜக) செயல்படுவோம். விஜய்யுடன் கூட்டணி பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியாது அவர்களுடைய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் அவர்கள் விருப்பபடி முடிவெடுப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கிறது பாத்துக்கலாம் நல்லதே நடக்கும் என்றார்.

Summary

BJP leader Nainar Nagendran has alleged that the police department in Tamil Nadu is not under the control of the Chief Minister.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர்கள்: இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயல்வதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வி... மேலும் பார்க்க

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை

தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு... மேலும் பார்க்க

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்! - தெற்கு ரயில்வே

சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாட... மேலும் பார்க்க

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில ச... மேலும் பார்க்க

ஜூலை 7ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. சுபமுகூர்த்த நாள்களில் அதி... மேலும் பார்க்க