உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிப் படுகொலை!
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியும், காரைக்கால் மாவட்டச் செயலாளருமான மணிமாறன் என்பவர், மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு, மீண்டும் காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள், காரைச் சேதப்படுத்தியதுடன், மணிமாறனையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்.
2022 ஆம் ஆண்டில் பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலை வழக்கில், மணிமாறன்தான் முதல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
TVK’s Karaikal Secretary Manimaran brutally murdered