உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
ஜூலை 7ல் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!
வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது.
சுபமுகூர்த்த நாள்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் பத்திரப்பதிவுத் துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அந்தவகையில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு வில்லைகள், 2 சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 300 முன்பதிவு வில்லைகள் மற்றும் அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Registration Department announced that additional tokens will be issued at all sub-registrar offices on July 7th is an auspicious day.