உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்! - தெற்கு ரயில்வே
சென்னை வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் உள்ளரங்கு விளையாட்டுத் திடல் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
புறநகர் ரயில்கள் செல்லும் சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இறகுப் பந்து, ஜிம்னாஸ்டிக் என உள் அரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே வேளச்சேரி முதல் பரங்கி மலை வரை பறக்கும் ரயில் வருகிற நவம்பரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
Southern Railway has decided to set up an indoor playground at the Velachery Suburban Railway Station in Chennai.