செய்திகள் :

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

post image

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது மகன் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த சர்க்கரை மற்றும் சோடியம் அளவு குறைவு காரணமாக தெலங்கானா முன்னாள் முதல்வரும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் வியாழக்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே கே.சி.ஆரின் உடல்நலம் குறித்து வியாழக்கிழமை நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விரைவில் அவர் குணமடைய வேண்டும் என வாழ்த்தினார். மேலும் மத்திய அமைச்சர்கள் ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோரும் சந்திரசேகர் ராவ் விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

இந்த நிலையில் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் மேலும் சந்திரசேகர் ராவுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை என்றும் அவரது மகனும் பி.ஆர்.எஸ் செயல் தலைவருமான கே.டி. ராமராவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Summary

BRS president K Chandrasekhar Rao was admitted to hospital for a routine health check-up and there are no serious health concerns, his son and BRS Working President K T Rama Rao said on Friday.

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க

மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம்! பிகாரில் புதிய சர்ச்சை!

பிகாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில், ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பிகாரில் காங்கிரஸ... மேலும் பார்க்க