செய்திகள் :

2-ஆவது டெஸ்ட்: அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகள், ஆஸி. 286-க்கு ஆல் அவுட்!

post image

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸி. முதல்நாள் முடிவில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கரிபியக் கடலில் அமைந்துள்ள கிரெனடா எனும் தீவில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 3 மணி வரை நடைபெற்றது.

முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மே.இ.தீ. அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்க போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் 2-ஆம் நாளுக்கு என நடுவர்கள் தீர்மானித்தார்கள்.

இந்தப் போட்டியில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸி. அணியை கிரீன், ஹெட் 90 ரன்கள் வரை எடுத்துச் சென்றனர்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க அடுத்ததாக பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி சிறப்பாக கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டையும் இவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

1-0 என முன்னிலையில் இருக்கும் ஆஸி. பேட்டிங்கில் சொதப்பினாலும் 2-ஆம் கம்பேக் தருவார்களா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Australia were all out for 286 runs at the end of the first day of the 2nd Test against the West Indies.

ஜடேஜா குறித்து நடுவரிடம் தொடர்ந்து முறையிட்ட பென் ஸ்டோக்ஸ்! எதற்காக?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வீரர்... ஜடேஜா படைத்த புதிய சாதனை!

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ... மேலும் பார்க்க

6 போட்டிகளில் 4 அரைசதங்கள்... அசத்தும் பியூ வெப்ஸ்டர்!

ஆஸ்திரேலியாவின் புதிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5-ஆவது போட்டியில் ஆஸி. அணிக்காக அறிமுகமானார் பியூ வெப்ஸ்டர். 31 வயதாகும் இவர் ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் அபாரம்; முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது.... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் முதல் இரட்டை சதம்; ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கியது.... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி.! டாஸ் வென்று பேட்டிங்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... மேலும் பார்க்க