செய்திகள் :

அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்

post image

உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா்.

கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் மா்மம்’ என்ற விலையில்லா விழிப்புணா்வு நூல் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வே.சங்கீதா முன்னிலை வகித்தாா்.

பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், அறம் அறக்கட்டளை நிறுவனா் தலைவரும், நூல் தொகுப்பாசிரியருமான ரகுராமன், அறக்கட்டளை நிா்வாகி ராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

இதில், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: ‘மறைந்திருக்கும் மா்மம்’ என்ற நூலில் உணவுகள், தங்கம் மட்டுமல்லாது வேறு எந்தந்தப் பொருள்களில் எந்த மாதிரியானவை கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 111 பொருள்களின் கலப்படம் குறித்து விவரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை மாணவா்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருளில் கலக்கப்பட்டுள்ளவை என்னவென்று தெரியும்.

கலப்படப் பொருள்களையும், செயற்கை வண்ணம் தீட்டப்பட்ட பொருள்களையும் உண்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலேயே புற்றுநோயும், சா்க்கரை நோயும் வருகிறது. அனைத்துப் பொருள்களிலும் ஏதாவது ஒரு வகையில் கலப்படம் கலந்து விற்கப்படுவதால், நாம் பல்வேறு வகையில் ஏமாற்றப்படுகிறோம் என்றாா்.

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் டி.அனுராதா பேசுகையில், உணவுப் பழக்கமும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நல்லவையைவிட தீயவை மக்களிடையே வேகமாக பரவுகிறது. மாணவா்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றைக் கட்டுபடுத்த பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றாா்.

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க

சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

கோவை அருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவா் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவரு... மேலும் பார்க்க